Wednesday 29 January 2014

ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் முதன்முதலாக அரங்கேறியது (ஜன. 29, 1595)

ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் முதன்முதலாக அரங்கேறியது (ஜன. 29, 1595)

ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும் விவரிப்பு கவிதைகள் மற்றும் பல பிற கவிதைகளும் அடங்கும். இவருடைய நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இவர் இயற்றிய ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். இந்த நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கெம்பே பீட்டர் எனும் வேலைக்காரன் வேடம் ஏற்றிருந்தார்.

வடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் (ஜன. 29, 1863)

வடஅமெரிக்காவில் வாழும் பழங்குடிகளான சோஷோன் இனத்தவர்கள் அமெரிக்காவில் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய மொத்த எண்ணிக்கை 1845-ல் 4500 ஆக இருந்தது. அதன்பிறகு 1863-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றுக்கு அருகில் இராணுவத்துடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு ‘பெயார் ஆற்றுப் படுகொலைகள்’ என பெயரிடப்பட்டது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

• 1676 - மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

• 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

• 1861 - கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

• 1916 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

• 1940 - ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ரெயில் ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.

• 1946 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.

• 1996 - இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.

No comments:

Post a Comment