Thursday 23 January 2014

+2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

+2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் Navik (General Duty) பணியில் சேர திருமணமாகாத ஆண்

விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Navik (General Duty)

சம்பளம்: ரூ.5,200 -20,200 + தர ஊதியம் ரூ.2,000

வயதுவரம்பு: 18-22-க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.08.1992 – 31.07.1996-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 -வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதிகள்: உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ., யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவடையும் தன்மை குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும்.

கண்பார்வை திறன்: 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் 2 முதல் 3 நாட்கள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை விண்ணப்பதார்ரகளே தயார் செய்து கொள்ள வேண்டும். தேர்வுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். அதற்கான தேதி, நேரம், இடம் பற்றிய தகவல்கள் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு அறிவிக்கப்படும்.

தேர்வு மையங்கள்: சென்னை, தூத்துக்குடி

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment