Wednesday 24 September 2014

சி.ஏ படிக்க விரும்புவோருக்கான நுழைவுத் தேர்வு

இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா கல்வி நிறுவனத்தால், சிஏ படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வே சி.ஏ. சி.பி.டி. என்பதாகும்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்தத் தேர்வு நடைபெறும். ஆண்டுக்கு நான்கு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி
சிஏ சிபிடி தேர்வெழுத விரும்புவோர் கணக்குப்பதிவியல் பாடம் எடுத்துப் படித்து பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
சரியான பதிலைத் தேர்வு செய்யும் வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு பிரிவுகளாகக் கேட்கப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் பதிலளிக்க இரண்டு மணி நேரங்கள் அளிக்கப்படும். பேப்பரில் மாணவர்கள் தேர்வெழுதும் விதத்திலும், ஆன் லைனில் தேர்வெழுதும் விதத்திலும் தேர்வுகள் அமையும்.
முதல் தாளில் அடிப்படை கணக்குப்பதிவியல் மற்றும் மெர்க்கன்டை லா பாடப்பிரிவில் இருந்தும், இரண்டாம் தாளில் பொதுப் பொருளாதாரம் மற்றும் குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் பிரிவு கேள்விகளும் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். தவறான பதில்களுக்கு எதிர்மறையான மதிப்பெண்கள் உண்டு.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்போது பதிவுக் கட்டணம் மற்றும் டியூஷன் கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். தேர்வு அறிவிப்பு வெளியானதும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுத் துறை தேர்வு மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடும். அனுமதிச் சீட்டுகளும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை அதாவது பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் சிஏ சிபிடி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் மட்டுமே மேற்கொண்டு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் படிக்க இயலும்.
மேலும்விவரங்களுக்கு www.icai.org இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment