Thursday 11 September 2014

பொது இடத்தில் புகை பிடித்தால் ரூ.20,000 அபராதம் விதிக்க சட்டம்?: மத்திய அரசு பரிசீலனை

பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ.200 முதல் ரூ.20,000 வரை அபராதம் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட கொடிய வியாதிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமை யான சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெல்லி அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்திரா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கடந்த வாரம் சமர்ப்பித்தது.
வயது வரம்பு
அந்த அறிக்கையில் கூறியிருப் பதாவது:
சில்லறை விற்பனையில் சிகரெட்டுகளை ஒன்று இரண்டு என பாக்கெட்டை பிரித்து விற்க தடை விதிக்க வேண்டும். புகைப்பிடிப்பவர்களின் வயது உச்சவரம்பை 18-லிருந்து 25 ஆக அதிகரிக்க வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதோடு அதை மீறுவோருக்கு ரூ.200 முதல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்க வேண்டும்.
அபராதம்
மேலும் சிகரெட் பாக்கெட் டுகள் மீது படத்துடன் கூடிய எச்சரிக்கைக் குறியீட்டை அச்சிட வேண்டும் என்ற விதிமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களில் சிகரெட் பற்றி விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.
இப்போது சில்லறை விற்பனையில் விற்பனையாகும் சிகரெட்டுகளில் 70 சதவீதம் பாக்கெட்டுகளாக அல்லாமல் ஒன்று இரண்டு என விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment