Wednesday 24 September 2014

ஐ.நா. மனித உரிமை ஆணைய தேர்தலில் இந்தியா போட்டி: இரண்டாவது முறை களம் இறங்குகிறது

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான மனித உரிமை ஆணையத்துக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா போட்டியிடுகிறது. தற்போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா உள்பட 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போதைய கவுன்சிலின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
2015-17 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் அக்டோபரில் நடைபெறும். இந்தியா ஏற்கெனவே உறுப்பி னராக உள்ள நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறது. இந்தியா போட்டியிடும் ஆசிய பிரிவில் நான்கு இடங்கள் உள்ளன.
ஏற்கெனவே ஆசியப் பிரிவில் வங்கதேசம், கத்தார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகியவை போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. ஐ.நா. பொதுசபை உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிப்பர். ஒரு நாடு தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. புவியியல் பகிர்வு அடிப்படையில் உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் தலா 13 இடங்களும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 8 இடங்களும், மேற்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கு 7 இடங்களும், கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment