Friday 26 September 2014

தகவல் தொழில்நுட்பத் துறையில் உடனடி வேலைவாய்ப்பு: 10 ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சி

தகவல் தொழில்நுட்பத் துறையில் உடனடியாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்கல் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. 2015-ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி பயிற்சி பெற்றவர்கள் ஒரு லட்சம் பேரும், உலகளவில் 14 லட்சம் பேரும், அதேபோல், டேட்டா அனலிட்டிக்கல் பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்காவில் 1.9 லட்சம் பேரும், உலகளவில் 4.4 லட்சம் பேரும் தேவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட இரு துறைகளிலும் உருவாகும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு அதற்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10 ஆயிரம் பொறி யியல் மாணவர்களுக்கும், கணிணி அறிவியல் மற்றும் பிசிஏ பட்ட தாரிகளுக்கும் சிறப்பு கணினி பயிற்சி அளிக்க ஐசிடி அகாடமி யும், இஎம்சி நிறுவனமும் முன் வந்துள்ளன.
இதுகுறித்து இஎம்சி நிறுவன தெற்காசிய பிரிவின் தலைவர் கிருஷ்ணகாந்த், தமிழ்நாடு ஐசிடி அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சிவகுமார் ஆகி யோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
பொறியியல், கணினி அறிவியல் பட்டதாரிகளை வேலைவாய்ப்புத் திறன் மிக்கவர்களாக உருவாக் கும் வண்ணம் எங்கள் நிறுவனங் கள் கூட்டு சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின் றன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு கிளவுட் இன்பிராஸ்டிரக்சர் சர்வீசஸ், பிக் டேட்டா அனலிட்டிக்கல் ஆகிய இரு பயிற்சிகளை இலவசமாக அளிக்க முடிவுசெய்துள்ளோம்.
உடனே வேலை
கல்லூரி பேராசிரியர்கள் 500 பேருக்கு இப்பயிற்சியை அளித்து அவர்கள் மூலமாக 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலம் மொத்தம் 40 மணி நேரம். பயிற்சி நிறைவில் சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும். எங்களிடம் ஏற் கெனவே உறுப்பினர்களாக உள்ள, ஏறத்தாழ 375 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயிற்சி பெறுவார்கள்.
பயிற்சியை முடிக்கும் மாணவர் களுக்கு ஐ.டி. துறையில் உடனடி யாக வேலை கிடைக்கும். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்த பயிற்சி திட்டம் செயல் படுத்தப்படும். பேராசிரியர் களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பயிற்சி நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment