Thursday 18 September 2014

சூரியனைச் சுற்றி கருவளையம்: வானில் ஓர் அதிசயம்

தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10.30 முதல் 12.30 வரை சூரியனை சுற்றி திடீரென கருவளையம் காணப்பட்டது. இதுகுறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவியல் விளக்கம் அளித்தனர்.
“பூமியில் இருந்து அதிக அளவில் வெப்பக்காற்று மேலெழும்போது ஏற்படும் நீர்த்திவலைகள் மீது சூரிய ஒளிக் கதிர்கள் 22 டிகிரி கோணத்தில் படும்போது இதுபோன்ற ஒளி விலகல் ஏற்படுகிறது. நீர்த்திவலைகள் அறுகோண வடிவில் இருப்பதால் சூரியனைச் சுற்றி அப்படி கருவளையம் தோன்றுகிறது” என வானியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வானில் தோன்றிய இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத் தோடு பார்த்தனர்.

No comments:

Post a Comment