Wednesday 12 February 2014

புதுதில்லி தலைநகராக்கப்பட்டது எப்போது?

இந்திய நாடு, ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911-ம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900-ம் ஆண்டில் பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது.

1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர். மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள கரோனேசன் பூங்காவில் அடிக்கல் நாட்டினார். புதுதில்லியின் பெரும்பகுதியான கட்டுமானப்பணிகள் 1911-ம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. 

இறுதியில் 1931-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் புதுதில்லி இந்தியாவின் தலைநகராக தொடங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment