Thursday 13 February 2014

கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14- 1998)

1998-ம் ஆண்டு கோவையில் நடந்த இனக்கலவரம் குண்டுவெடிப்பாக மாறியது. பிப்ரவரி 14-ந்தேதி கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்குண்டு வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது. * 1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். * 1879 - சிலியின் ராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர். * 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன. * 1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

* 1919 - போலந்து- சோவியத் போர் ஆரம்பமானது. * 1924 - ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர். * 1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது. * 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. * 1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது. * 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment