Friday 27 December 2013

மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள்

மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள்

* Art.174-ன்படி மாநிலத்தின் சட்டப் பேரவை அல்லது சட்ட மேலவை, அவ்வப்போது தேவைப்படும் இடத்திலும், உரிய காலத்திலும் கூட்டப்பட வேண்டும்.

* எப்படியிருப்பினும் ஒரு கூட்டத்துக்கும் மற்றொரு கூட்டத்துக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.

* ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஒரு சபையின் கூட்டத் தொடரை முடித்துவிடலாம், அல்லது சட்டப் பேரவையாக இருப்பின் கலைக்கலாம். அதாவது மாநில சட்ட பேரவை ஆண்டுக்கு இரு முறையாவது கூட்ட வேண்டும் என்பதே அரசியலமைப்பின் வரை முறையாகும்.

* இந்தியா விடுதலை பெற்ற அதே நாளில்தான் ஜம்மு-காஷ்மீரும் விடுதலை பெற்றது.

* அப்போது அங்கு மன்னராட்சி நடைமுறையில் இருந்தது. ஜம்மூ-காஷ்மீர், இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையாமல் தனித்த நாடாகவே நீடிக்க விரும்பியது. அவ்வாறு நீடிக்க முயற்சித்தது.

* எனினும் மக்களின் பாகிஸ்தானின் தாக்குதலுக்குட்பட்டதன் காரணமாக, அக்டோபர் 26,1947-ல் இந்தியாவுடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் ஜம்மு-காஷ்மீரின் சார்பாக அதன் மன்னர் ஹரி சிங் கையெழுத்திட்டார்.

* எனினும் மக்களின் விருப்பம் இதில் வெளிப்படாதிருந்ததைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் ஒரு முழு மாநிலத்தன்மையுடன் இந்தியாவுடன் இணைக்கப்படாமல், படிப்படியாக இணையும் மாநிலமாகவே கருதப்பட்டது.

* ஜம்மூ-காஷ்மீரின் அரசியல் நிர்ணயசபை 17.11.1957-ல் இணைப்பை உறுதி செய்தது.

* இப்படி இணைந்ததால் தான் காஷ்மீருக்கு ஒரு தனி அந்தஸ்து தரவேண்டியதாயிற்று.

* அரசியலமைப்பின் Art.370 ஜம்மூ-காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை வரையறுத்துள்ளது.

* இந்த தனி அந்தஸ்து, அம்மாநிலத்துடன், இந்தியா கொண்டிருந்த ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்டுள்ளது.

* ஜம்மு-காஷ்மீருக்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. அதன்படியே அம்மாநிலம் இயங்குகிறது. இந்த அரசியலமைப்பு ஜனவரி 26,1957 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் தலைப்பின் மீதும், பாராளுமன்றம் சட்டமியற்ற இயலாது.

* மேலும் மூன்று பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திடமே உள்ளது.

* மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கு கொள்ள விரும்புவோர், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

* அது போலவே அங்கு சொத்துக்களை வாங்கவும், விற்கவும், ஜம்மூ-காஷ்மீர் மாநிலப் பிரஜைகளுக்கே உரிமையுண்டு.

* சொத்துரிமை தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிப்படை உரிமையாக நடைமுறையில் உள்ளது.

* தேசிய நெருக்கடி நிலையைப் பொறுத்தவரை, போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக மட்டுமே ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்தப்பட இயலும்.

* அதாவது ஆயுதமேந்திய உள்நாட்டுக் கலவரம் காரணமாக கொண்டு வரப்படும் நெருக்கடிநிலையை ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்த இயலாது.

* அரசியலமைப்பு இயந்திரம் சரிவர இயங்காத சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியையும், தேவைப்பட்டால் 6 மாதங்கள் வரை ஆளுநர் ஆட்சியையும் பிரகடனப்படுத்த இயலும்.

* ஜம்மூ-காஷ்மீரின் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலின்றி, அதன் எல்லைகளில் எந்தவித மாற்றத்தையும், பாராளுமன்றம் மேற்கொள்ள இயலாது.

* ஜம்மூ-காஷ்மீர் மாநில ஆளுநரை நியமிக்கும்போது அம்மாநிலத்தை கலந்தாலோசித்த பின்னரே பாராளுமன்றம் நியமிக்க இயலும்.

* பாராளுமன்றம் இயற்றும் முன் தடுப்புப் பாதுகாவல் சட்டங்கள் ஜம்மூ-காஷ்மீருக்கு தானாகவே பொருந்தாது.

* அத்தகைய சட்டங்கள் அம்மாநில சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே செல்லத்தக்கவை.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி நெருக்கடி நிலையை பாராளுமன்றம் அறிவிக்க இயலாது.

* இந்திய அரசியலமைப்பின் பகுதி-IV-ல் சொல்லப் பட்டுள்ள வழிமுறைக்கோட்பாடுகள் எதுவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது.

மத்திய மாநில உறவுகள் - THE CENTRE - STATE RELATIONS

* இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சி அம்சங்கள் சிலவற்றை உள்ளடக்கிய ஒற்றையாட்சி முறைக்கு வழி செய்கிறது.

* சில அறிஞர்கள் நமது இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் தழுவல் என்பர்.

* மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையேயான அதிகாரப் பங்கீடு முறை 1935-ம் ஆண்டு சட்ட அமைப்பை சிறிது உள்ளடக்கி இருக்கிறது.

* இன்றைய அரசியல் சட்டம் மைய மாநில அரசுகளுக்கிடையேயான சட்டமியற்றும் துறை அதிகாரங்Kலை மூன்று பட்டியல்களாக பகுக்கிறது.

அவை முறையே, மைய, மாநில மற்றும் பொது அதிகாரப் பட்டியல்களாகும். மைய அரசின் அதிகாரப்பட்டியலில் 97 துறைகள் அடங்கும். இதுவே மிகப் பெரிய அதிகாரப்பட்டியலாகும்.

* மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் 66 துறைகளும், பொது அதிகாரப் பட்டியலில் 47 துறைகளும் அடங்கும்.

* மத்திய மாநில உறவுகள் குறித்து 1969-ல் இராஜமன்னார் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு இந்திய ஆட்சிப் பணிகள் பணியிடங்களைக் கலைக்கப் பரிந்துரை வழங்கியது.

* 1983-ல் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய சர்க்காரியா குழு நியமிக்கப்பட்டது.

No comments:

Post a Comment