Sunday 1 December 2013

தமிழ் நாடு அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக உயர் நீதி மன்றத்தில் உதவியாளர் பிரிவில் உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கான பெர்சனல் அசிஸ்டன்ட் பிரிவில் 57 காலி இடங்களும், பர்சனல் அசிஸ்டன்ட் பிரிவில் 7 இடங்களும், அசிஸ்டன்ட் பிரிவில் 37 இடங்களும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பிரிவில் 28 இடங்களும், டைப்பிஸ்ட் பிரிவில் 139 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது : இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்காணல் என்று தகுதி அடிப்படையில் அடுத்தடுத்த தேர்ச்சி முறை இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : எழுத்துத் தேர்வுக்கு ரூ.150/-, திறன் அறியும் தேர்வுக்கு ரூ.50/- என்று கட்டணம் இருக்கிறது.
முழு விபரங்களை இணைய தளத்தில் அறியவும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளது. முதலில் விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பித்து இதன் பின்னர் கட்டணத்தை வங்கிகள் மூலமாகவோ அல்லது அஞ்சல் அலுவலகம் மூலமாகவோ செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 23.02.2014
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.12.2013
இணையதள முகவரி :www.tnpsc.gov.in/notifications/19_2013_not_eng_pa_asst_co_ty_high_court.pdf

No comments:

Post a Comment