Thursday 26 December 2013

காலமானார் கலாஷ்னிகோவ் ஏ.கே. 47 துப்பாக்கியை தந்தவர்

ஏ.கே.47 ரக துப்பாக்கியை உருவாக்கிய ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் மிகையில் கலாஷ்னிகோவ் மரணமடைந்தார். அவருக்கு வயது 94. இப்போதும் உலகம் எங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கி ஏ.கே.47 ஆகும். இதுவரை 10 கோடிக்கும் அதிகமான ஏ.கே.47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளன.
1949-ம் ஆண்டு சோவி யத் ரஷ்ய ராணுவத்தில் அதி காரப்பூர்வமாக இத்துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது. மிகவும் நவீனமானது, பயன்படுத்த எளி தானது, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும், நீண்ட நாள்கள் உழைக்கக் கூடி யது என்பதால் இத்துப்பாக்கி சர்வதேச அளவில் எளிதில் பிரபலமானது.
கலாஷ்னிகோவின் ஆட்டோ மேட்டிக் துப்பாக்கி 1947-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது என் பதை உணர்த்தும் வகையிலேயே அத்துப்பாக்கிக்கு ஏ.கே.47 என்று பெயரிடப்பட்டது. கலாஷ்னிகோவ்வின் 90-வது பிறந்த நாளின்போது மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது பேசிய கலாஷ்னி கோவ், ஏ.கே.47 துப்பாக்கி சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் அப்பாவிகளைக் கொல்ல பயன் படுத்தப்படுவதைக் கேள்விப்படும் போது மிகவும் வேதனை ஏற்படுகிறது. நம் நாட்டின் எல்லையைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்துப் பாக்கியை வடிவமைத்தேன். ஆனால் இப்போது அது தவ றாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆட்சியாளர்களின் த வறும் அதிகம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கலாஷ்னிகோவ்வின் இளம் வயது வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே இருந்தது. அவரது தந்தை சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார். போர் காலத்தில் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கலாஷ்னிகோவ், போரில் படு காயமடைந்ததால் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். பின்னர் ராணுவத் துக்கான ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றினார். அவரது முதல் முயற்சியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ரஷ்ய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டாலும், ஏ.கே.47 அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது.

No comments:

Post a Comment