Tuesday 31 December 2013

பாதுகாப்புப்படை தேர்வு அறிவிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அமைச்சகம் மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளை பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். புது டில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் யு.பி.எஸ்.சி.,யின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் இணைவதற்கான பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
என்ன படைகள்: யு.பி.எஸ்.சி., நடத்தும் இந்த பொது எழுத்துத் தேர்வின் மூலமாக 375 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் 320, நேவல் அகாடமிக்கு 55 என்ற எண்ணிக்கையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிபன்ஸ் பதவிகளான 320ல் 208 ராணுவத்திற்கும், 42 கப்பல் படைக்கும், 70 இந்திய விமானப் படைக்கும் உள் ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளது. 
தேவைகள்: இந்த பிரிவுகளில் இந்திய ராணுவம் சார்ந்த இந்தியன் டிபன்ஸ் அகாடமி பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்திய கப்பல் படை மற்றும் இந்திய விமானப்படை சார்ந்த பதவிக்கு பிளஸ் 2 படிப்பை கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களுடன் படித்திருக்க வேண்டும். 
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பெர்சனாலிடி டெஸ்ட் 
விண்ணப்பிக்கும் முறை: ரூ.100/- ஆன்-லைன் அல்லது ஆப்-லைன் முறையில் பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2014 
இணையதள முகவரி http://upsc.gov.in/

No comments:

Post a Comment