Tuesday 3 December 2013

மங்கள்யான்: விண்வெளியில் ஒரு மைல்கல் சாதனை

செவ்வாய்கிரகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ‘மங்கள்யான்’ ஆய்வுக்கலம் பூமியில் இருந்து 9.25 லட்சம் கி.மீ தொலைவைக் கடந்துள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 1.14 மணிக்கு இந்த நிகழ்வு நடந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் கார்னிக் கூறுகையில், புவி வட்டப்பாதையில் இருந்து வெளியேறி செவ்வாய் நோக்கிய பயணத்தை தொடங்கியதில் இருந்து சரியாக 72 மனி நேரத்திற்குப் பின்னர் ‘மங்கள்யான்’ பூமியில் இருந்து 9.25 லட்சம் கி.மீ தூரத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் கோள்களுக்கு இடையேயான சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. இன்னும் 300 தினங்களுக்கு, ‘மங்கள்யான்’ சூரியனைக் கடந்து செல்லும்,என்றார்.

No comments:

Post a Comment