Saturday 6 December 2014

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்

உரைநடை: உலகளாவிய தமிழர்
* கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை
* உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
* இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
* சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
* வாணிகம், வேலைவாய்ப்பு காரணமாகவே தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வந்தனர்.
* இது குறித்து செய்தி சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது.
* திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர் - ஒளவையார்.

* சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
* ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
* இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.
* சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் ஆட்சி மொழியாகத் தமிழ் திகழ்கிறது.
* உலகெங்கும் அச்சு ஒலி, ஒளி ஊடகங்களை தமிழர் நடத்தி வருகின்றனர்.

துணைப்பாடம்: திரு.வி.கலியாணசுந்தனாரின் தமிழ் பணி
பிறப்பும் கல்வியும்:
* சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் - சினம்மையாரின் மகனாக 26.08.1883 ஆம் நாள் பிறந்தார்.
* சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.
* கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார்.

தமிழ் பற்று:
* "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதை முழு மூச்சாக கொண்டார்.
* வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.

பிறமொழியறிவு:
* தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.
* * ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.
காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை:
* இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலை ஊறுங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தையைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள்கொண்டு எழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

பேசுப்பணி:
* "திரு.வி.க நடை" என்ற ஒரு தனி நடையை நடைமுறைப் படுத்தினார்.
* பேசுவது போலவே எழுதுவது, எழுதுவது போலவே பேசுவது ஆகும்.
* அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை தன் உணர்ச்சிமிகு பேச்சால் தம்பால் ஈர்த்தார்.

எழுத்துப்பணி:
* உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறினார்.
* "அவருக்கு வாய்ந்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது" என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாராட்டி உள்ளார்.

உரைநடை நூல்கள்:
* மனித வாழ்கையும் காந்தியடிகளும்
* பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
* இமயமலை அல்லது தியானம்
* முருகன் அல்லது அழகு
* சைவத்திரு
* சைவத்தின் சமரசம்
* கடவுட் காட்சியும் தாயுமானவரும்
* இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
* தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
* நாயன்மார் வரலாறு
* தமிழ்நூல்களில் பெளத்தம்
* காதலா? முடியுமா? சீர்திருத்தமா?
* என் கடன் பணிசெய்து கிடப்பதை
* இந்தியாவும் விடுதலையும்
* தமிழ்ச்சோலை
* உள்ளொளி

செய்யுள் நூல்கள்:
* முருகன் அருள்வேட்டல்
* திருமால் அருள்வேட்டல்
* கிருத்துவின் அருள்வேட்டல்
* அருகன் அருகே
* உரிமை வேட்டல்
* பொதுமை வேட்டல்
* பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியடிகளும்

இதழ்ப்பணி:
* தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்.

தமிழ் வாழ்வினர்:
* வயதாகி படுக்கையில் இருந்த போதும் வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்" என்னும் நூலை மு.வ உதவியுடன் வெளியிட்டார்.
* அவர் மனைவி இறந்த போதும், "நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்" எனக் கூறியவர்.
* 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பதினேழாம் நாள் தமது எழுபத்தோரம் வயதில் இறந்தார்.

உமர்கய்யாம் பாடல்கள்
சொற்பொருள்:
* பகர்வது - சொல்வது
* தெளிவீரே - தெளியுங்கள்
* துவ்வா - நுகராத
* அகன்று - விலகி
* ஆழி - கடல்

இலக்கணக் குறிப்பு:
* நோக்கி - வினையெச்சம்
* துவ்வா விடம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:
* கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர்.
* பெற்றோர் - சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்
* மொழிபெயர்ப்பு - உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அப்பாடல்களின் தொகுப்பு "உமர்கய்யாம் பாடல்கள்" என்பது.
* இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர்.
* இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
* உமர்கய்யாம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.
* இவரின் முழுப்பெயர் கியதுதின் அபுல்பாத் உமர்கய்யாம் எனபது.

இயற்றிய நூல்கள்:
* மலரும் மாலையும்
* மருமக்கள் வழி மான்மியம்
* குழந்தைச் செல்வம்
* ஆசிய ஜோதி
* காலம்: 1876 - 1954 ஆம் ஆண்டு வரை.
நூற் குறிப்பு:
* இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழி பெயர்ப்பு.
* இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.
* இதில் நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.
* வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன.
* ரூபாய் என்பது நான்கடிச் செய்யுள்.

No comments:

Post a Comment