மின்சார நிறுவனங்களை வாடிக் கையாளர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய மின்சாரம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். மின் விநியோகத்தில் நிறுவனங்களிடையே போட்டியை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே மாதிரியான விநியோக முறைய அரசு கையாண்டு வருவதால் மின்சார துறை வளர்ச்சி அடையாமல் ஒரே இடத்தில் நிற்கிறது. தலைமுறை மாற்றத்துக்கேற்ப மின்சாரத் துறையும் மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய தொழிலகக் கூட்ட மைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்த போட்டியை அனுமதிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந் தெடுக்கும் உரிமை கிடைக்கும் என்றார். மின் விநியோ கத்தில் போட்டியை அனுமதிப்ப தன் மூலம் மின் கட்டணங்களை உயர்த்த முடியாது என்றும், நிறுவனங்களின் போட்டி காரண மாக வாடிக்கையாளர் சேவை மேம்படும் என்றும் தெரிவித்தார்.
மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. புதிய விதிமுறையின்படி மின்னுற்பத்தி யாளர்களே விநியோகத்தையும் கவனிக்க வேண்டியதில்லை. அதை வேறொரு நிறுவனம் கவ னிக்கும். இதுபோன்ற நடைமுறை தான் தற்போது இங்கிலாந்தில் அமலில் உள்ளது. உற்பத்தி, விநி யோகம் என இருவேறு செயல் பாடுகள் இருக்கும்போது அதை இருவேறு நிறுவனங்கள் சிறப் பாக நிர்வகிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
நடப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சி மேற் கொள்ளப்படும் என்றார். இந்த சட்டதிருத்தம் தொடர்பாக நிறுவனங்களின் கருத்துகளும், ஆலோசனையும் பெறப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போது மின் விநியோகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் ஒரே வழியே பயன்படுத்தப்படுகிறது. இந்த விநியோக முறையை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், மின்சார நிறுவனங்கள் தங்களுக்கு என்று தனி மின் விநியோக பாதைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.