Saturday 6 December 2014

முன்னேறும் மாணவர்கள்

திருவள்ளுவர் “கல்வி அற்றம் காக்கும் கருவி” என்று தம் உலகப் பொதுமறையில் உரைத்திருக்கிறார். வேலைவாய்ப்பு, பணம் சம்பாதித்தல் உள்ளிட்ட உடனடித் தேவைகளை முன்னிறுத்தி தற்போதைய கல்வி வழங்கப்படுகிறதா? அல்லது மேலைநாடுகளுக்கு இணையாக “முன்னேற்றம்” மற்றும் உலக மயமாதல் என்னும் கொள்கையின் உச்சத்தை அடைய முயல்கிறதா? என்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுகின்றன.
சீரிய கருத்துகள்
மனித இயந்திரங்களை உருவாக்கி, வளாகத்திலேயே வேலைவாய்ப்பைத் தரும் தொழிற்சாலைகளாகக் கல்விச்சாலைகள் மாறிவிட்டிருக்கின்றன.
ஆசிரியர்களுக்குத் “தேர்ச்சி விழுக்காடு” என்னும் அழுத்தம் தரப்படுகிறது. பாடத்தைக் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுத்தர வேண்டும் என்ற இலக்கு ஆகியவை முன்னிறுத்தப்படுகின்றன. நீதிபோதனை, ஆசிரியர் - மாணவன் நல்லுறவு, சமூகச் சிந்தனை, போன்ற சீரிய கருத்துகள் புறம் தள்ளப்பட்டு வருகின்றன.
வலைத்தளங்களின் வலைவிரிப்பு , திரைப்படம் மற்றும் சின்னத்திரைகளில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைக் கலாச்சாரம் மாணவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது.
முன்னேறும் இளைஞர்கள்
பாட்டி தாத்தாவின் அறநெறிக் கதைகள், புராணக் கதைகள் அவற்றில் உள்ள நியாயங்கள், கலாச்சாரம் சார்ந்த கருத்துகள் போன்றவற்றை இன்றைய இளம் தலைமுறை பெற வழியே இல்லாதது
ஆனாலும் இன்றைய மாணவனின் கற்பனைத் திறன், அறிவுத் திறன், அறிவியல் ஆர்வம், தொழில்நுட்பங்களை உள்வாங்கும் மற்றும் கையாளும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவை அதிகமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதனால் சரியானதை நோக்கி இளைஞர்கள் முன்னேறுவார்கள் என நம்பலாம்.
-ரவிச்சந்திரன், ஆசிரியர்
சென்னை-117.

No comments:

Post a Comment