Saturday 6 December 2014

ரயில்வே நிதி நிலையை மேம்படுத்த உயர்நிலை குழு: 100% அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்கள்

ரயில்வே துறையின் நிதி நிலையை மேம்படுத்துவதற் கான வழிமுறைகளை ஆராய்வதற்காக உயர்நிலைக் குழு ஒன்றை ரயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது. மேலும் இத் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே துறையின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டி.கே.மிட்டல் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், ரயில்வே வாரியத்தின் ஆலோசகர் (கணக்கு) மற்றும் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
உறுப்பினர்களில் நான்கு பேர் ரயில்வே துறை தொடர் பான அலுவலர்களும், இரண்டு பேர் தனியார் நிறுவனங் களைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுவர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி நிறுவனமும் பங்கு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழு இப்போதுள்ள வருவாய் கட்டமைப்பு, அதன் திறன், வருவாயைப் பெருக் குவது மற்றும் செலவினங் களைக் குறைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, டிசம்பர் 21-க்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், ரயில்வே துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக் கான திட்டங்களை தெரிவித் துள்ளார்.
அவை பொதுத் துறை-தனியார் துறை பங்கேற்புடன் புறநகர் முற்றங்கள், அதிவேக ரயில் திட்டங்கள், தனியான சரக்கு ரயில் தடங்கள், இஞ்சின் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு, ரயில்வே மின்சாரமயம், சிக்னல் முறைகள், சரக்கு முனையம், பயணிகள் முனையம், தொழில் பூங்காக்களில் ரயில்வே கட்டமைப்பு, பறக்கும் ரயில் திட்டங்கள் ஆகியன ஆகும்.

No comments:

Post a Comment