Wednesday 26 November 2014

விரிவுரையாளர் தகுதித் தேர்வில் மாற்றம் வருமா?

கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) முறையில் மாற்றங்களை செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவால் (யூஜிசி) நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு பரிந்துரைக்க உள்ளது.
இப்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறை, மூன்று வினாத்தாள் களைக் கொண்டது. கொள்குறி வகை யைச் சேர்ந்த இந்த மூன்று வினாத் தாள்களில் முதல் தாள் பொது அறிவு தொடர்பானது. மற்ற இரண்டும் பாடம் தொடர்பானவை. முதல் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டும் மற்ற இரு தாள்கள் திருத்தப்படும்.
யுஜிசியால் நியமிக்கப்பட்ட டி. நரசிம்ம ரெட்டி தலைமையிலான ஆலோசனைக் குழு, முதல் இரு தாள் களில் தவறான விடை அளிக்கப்பட்டால், அதற்கு மதிப்பெண்களைக் குறைக்க லாம் என பரிந்துரைக்க உள்ளது. இது போல் மூன்றாவது தாள் விரிவான விடை அளிக்கும் வகையில் மாற்றவும் ஆலோசனை வழங்க உள்ளது. அதன் பின், அடுத்த மாதம் நடைபெறவுள்ள யு.ஜி.சி. கூட்டத்தில் அந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
அதன் பிறகு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தால் தற்போதுள்ள தேர்வு முறை மீண்டும் 2012-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போன்ற முறைக்கு மாற்றப்படும்.
இதுகுறித்து, யுஜிசி துணைத் தலைவர் தேவராஜன் கூறும்போது, “தேர்வில் மாற்றங்களை செய்வது குறித்து பரிந்துரைக்க புதிய ஆலோ சனைக் குழு அமைக்கப்பட உள்ளது. எனவே, தற்போதுள்ள ஆலோசனைக் குழு சமர்ப்பிக்க இருக்கும் பரிந்துரையை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

No comments:

Post a Comment