Tuesday 29 April 2014

ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்துள்ளது. இங்கு 267 டெக்னிகல் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி, கான்பூரில் ஜெனரல் பிட்டரில் 45ம், மெஷினிஸ்டில் 160ம், டர்னரில் 62ம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 24.11.1995க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய டிரேடு பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.05.2014.
இணையதள முகவரி: www.ofkanpur.gov.in/recruitment/candidate/candviewfrm.php?act=2

No comments:

Post a Comment