Wednesday 30 April 2014

சிங்கம் சிங்கிளா வருமா?

# ஆண் சிங்கத்தின் சராசரி எடை 180 கிலோ. பெண் சிங்கத்தின் எடை 130 கிலோ.
# சிங்கம் மணிக்கு சராசரியாக 50 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சிங்கங்களால் தூரத்தைக் கடக்கமுடியும். நீண்ட தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கும் அளவுக்கு திறன் கிடையாது.
# சிங்கம் 36 அடி பாயும்.
# ஆப்ரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சிங்கங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
# சிங்கம் தனியா (சிங்கிளா) வரும் என்று சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உயிரினங்களைவிடவும், கூடி வாழும் இயல்புடையவை சிங்கங்கள்.
#ஆண் சிங்கங்கள் சரியான சோம்பேறிகள். வேட்டையில் பெண் சிங்கங்களே அதிகம் ஈடுபடும்.
# ஒரு நாளைக்கு சுமார் 20 மணிநேரம்வரை சிங்கங்கள் ஓய்வு எடுக்கும்.
# பிடரி முடி வாயிலாக ஆண் சிங்கங்களைத் தனித்து அடையாளம் காணமுடியும்.
# அடர் நிறத்தில் பிடரி முடி உள்ள சிங்கங்களைப் பெண் சிங்கங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
# அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, இங்கிலாந்து, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம்.
# சிங்கத்தின் சராசரி வாழ்நாள் காலம் 12 ஆண்டுகள்.
# சிங்கத்தின் உறுமல் எட்டு கிலோமீட்டர் தூரம்வரை கேட்கும்.

No comments:

Post a Comment