Wednesday, 4 September 2013

IBPS – PROBATIONARY OFFICER மாதிரி வினா விடை – 2013


IBPS – PROBATIONARY OFFICER

மாதிரி வினா விடை – 2013

தேர்வு எப்படி: இத்தேர்வுக்கான நேரம் 2 மணி. வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ வகையில் இருக்கும். 200 வினாக்கள் மற்றும் 200 மதிப்பெண்களை கொண்டது. தவறாஅக பதிலளிக்கும் ஒவ்வொரு வினாவுக்கும் 0.25 நெகடிவ் மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு 5 பகுதிகளைக் கொண்ட்து.

பகுதி: (ரீசனிங்) – வினாக்கள் (40[1]) – மதிப்பெண் (40)
பகுதி: (ஆப்டிடியூட்) – வினாக்கள் (40[1]) – மதிப்பெண் (40)
பகுதி: (ஆங்கிலம்) – வினாக்கள் (40[1]) – மதிப்பெண் (40)
பகுதி: (வங்கி தொடர்பாக பொது அறிவு) – வினாக்கள் (40[1]) – மதிப்பெண் (40)
பகுதி: (கம்ப்யூட்டர்) – வினாக்கள் (40[1]) – மதிப்பெண் (40)

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு பகுதியிலும் மொத்தமுள்ள 40 மதிப்பெண்களில், குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும். அதே நேரத்தில் ஐந்து பகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்த மதிப்பெண்ணும் அதிகளவில் எடுக்க வேண்டும். இந்த ‘கட்-ஆப்’ மதிப்பெண் எவ்வளவு என்பது, ரிசல்ட்டின் போது, ஐ.பி.பி.எஸ்., நிர்ணயிக்கும்.

இதன்படி எழுத்துத் தேர்வில் ‘கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர்கள், நேர்முகத்தெர்வுக்கு அழைக்கப்படுவர். பின் (எழுத்துத்தேர்வு+நேர்முகத்தேர்வு) மதிப்பெண் 100க்கு மாற்றப்படும். இதன்பின், வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் ‘தேர்ச்சி’ மதிப்பெண் அறிவிக்கப்பட்டு, இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தயாராவது எப்படி: Probationary Officer மற்றும் Clerical ஆகிய இரண்டு தேர்வுகளுக்குமே, பாடத் திட்டம் என்பது பெரும்பாலும் பொதுவானதாக இருக்கும். PO தேர்வுக்கு Quantitative Aptitude பிரிவில் Numerical Ability, Arithmatical Ability தவிர, புதிதாக Data Analysis என ஒரு பிரிவில் இருந்து பை சார்ட், கிராப்ஸ், வென் டயகிராம்ஸ், டேட்டா இண்டர்பிரடேஷன் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

அதே போல ரீசனிங் பிரிவில் கிளர்க் தேர்வு போன்று அல்லாமல், நன்கு சிந்தித்து பதிலளிக்கும் வகையில் கடினமாக இருக்கும். மற்றபடி இரண்டுமே ஒரே மாதிரியே இருக்கும்.

இந்த 2 பிரிவுகளை தவிர, ஆங்கிலம், பொது அறிவு (வங்கித்துறை தொடர்பாக), கம்ப்யூட்டர் ஆகியவை, 2 தேர்வுகளுக்கும் பொதுவானதாகவே இருக்கும்.

என்னென்ன பாடங்கள்

1. Reasoning
இப்பிரிவில் வெர்பல் ரீசனிங் மற்றும் நான்-வெர்பல் ரீசனிங் என்ற இரு வகையில் கேள்விகள் கேட்கப்படும். Decision-making, classification, word-formation, blood relation series, symbol&notation, decoding&coding, statement & conclusion, sitting arrangement, series completion, analyzing any missing figure, inequalities, syllogism ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

2. Quantitative Aptitude
இப்பிரிவில் Number systems, Fraction, Ratio and Proportion, Time and work, Percentage, Profit and Loss, Simple Interest and Compound Interest, Average, Time and distance, Mensuration, Partnership, Bar graph & Pie-chart, Probability உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும். 

3. கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டரை பயன்படுத்துவது தொடர்பான குறைந்தபட்ச தகுதி இருக்கிறதா என சோதிக்கும் வகையில் இப்பகுதியில் கேள்விகள் இடம் பெறும். எம்.எஸ்.வேர்டு, எக்ஸ்சல், பவர்பாயின்ட், இண்டர்நெட், சர்வர், ஆபரேட்டிங் சிஸ்டம், நெட்வொர்க் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

4. ஆங்கிலம்
இப்பகுதி போட்டியாளரின் ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் இருக்கும். Find the grammar error, synonyms, antonyms, sentence completion, word formation, rearrangement of passage, phrases and idioms உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

5. பொது அறிவு (வங்கி தொடர்பானது)
பொது அறிவு பகுதியில் நடப்பு நிகழ்வுகள் மற்றும் வங்கித்துறை தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.

மாதிரி வினாத்தாள்: இரண்டு தேர்வுகளின் மூலம் தோராயமாக 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளதால், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்து உள்ளது.

No comments:

Post a Comment