சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 4ம் தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின், பல்வேறு துறைகளில், குரூப் - 2 நிலையில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன. டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தேர்வாணைய இணைய தளம் வழியாக, கடந்த, 5ம் தேதி முதல், பட்டதாரிகள், விண்ணப்பித்து வருகின்றனர்; அக்., 4ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி தேதி முடிவதற்குள், மேலும், மூன்று லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment