தயக்கம் தவிர்ப்போம்
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?
இந்தக் கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், உடனே பதில் சொல்லி விடுவீர்கள் – நீல் ஆம்ஸ்ட்ராங் என்று.
இதில் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உண்மையில் நிலவில் முதன் முதலில் யார் கால் வைத்திருக்க வேண்டும் தெரியுமா?
எட்வின் சி ஆல்ட்ரின். நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் விமானி இவர். நிலவுக்கு அப்பல்லோ விண்கலத்தை அனுப்பும் முயற்சி ஆரம்பமான போது, அதில் பயணம் செய்ய இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருவர், எட்வின் சி ஆல்ட்ரின். அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும், விண்ணில் நடந்த அனுபவம் உள்ளவர். அதனால் அவர் அப்பல்லோ விண்கலத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார்.
அடுத்தவர், நீல் ஆம்ஸ்ட்ராங்க். இவர் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி. இவர் அப்பல்லோ விண்கலத்தின் இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடந்ததும் நாசாவிலிருந்து ‘பைலட் பர்ஸ்ட்’ என்று இறங்க சொல்லி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்… எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால்… ஒரு சிறு தயக்கம். இந்த தயக்கம் மணிக்கணக்கில் நீடிக்கவில்லை. சில நொடிகள் தான் தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ‘கோ-பைலட்’ நெக்ஸ்ட்.
கட்டளை வந்த அடுத்த நொடி, கொஞ்சம் கூட தயங்காது நீல் ஆம்ஸ்ட்ராங் தரரையில் காலடி எடுத்து வைத்தார்.
ஒரு நொடி தயக்கத்தில் உலக வரலாறு மாற்றி எழுதப்பட்டுவிட்டது.
நிலவில் கால் பதித்த முதல் வீரர் என்று இந்த உலகமே நீல் ஆம்ஸ்ட்ராங்கைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.
இன்று உலகம் முழுவதும் நீல் ஆம்ஸ்ட்ராங்கைத் தெரிந்த அளவில், எட்வின் சி ஆல்ட்ரினை தெரியாது.
இந்த அத்தனை புகழுக்கும் பாராட்டுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரராக இருந்திருக்க வேண்டிய எட்வின் சி ஆல்ட்ரின், அதற்கான வாய்ப்பு கிடைத்தும், ஒரு நொடி தயக்கத்தால் அத்தனையையும் இழந்துவிட்டார்.
நீங்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் போல இருக்க போகிறீர்களா? இல்லை… எட்வின் சி ஆல்ட்ரின் போல இருக்க போகிறீர்களா?
No comments:
Post a Comment