கணித அறிவியலில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கான ஒரு அறிவுசார் மையமாக சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம் (Chennai Mathematical Institute) திகழ்கிறது. 1989ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில், கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையின் ஆராய்ச்சி குழுக்கள், அகில இந்திய அளவில் புகழ் பெற்றவை.
பல சிறந்த பிஎச்.டி மாணவர்களை இந்த நிறுவனம் பயிற்றுவித்துள்ளது. இந்நிறுவனத்தில் பட்டப்படிப்புகளை நிறைவுசெய்யும் மாணவர்கள் பெறும் அங்கீகாரமே தனி. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் இணைவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
இக்கல்வி நிறுவனத்தில், கணிதம், இயற்பியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகளில், பி.எஸ்.சி., எம்.எஸ்.சி மற்றும் பி.எச்.டி., போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு, http://www.cmi.ac.in//
No comments:
Post a Comment