Thursday, 26 September 2013

ஏழாவது ஊதிய கமிஷன் அமைப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய கமிஷனை மத்திய அரசு அமைத்துள்ளது. இதை அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை அறிவித்தார்.

இதன்படி, 2016 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பாக, தனது பரிந்துரைகளை அரசுக்கு ஏழாவது ஊதியக் கமிஷன் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பள உயர்வு மற்றும் புதிய சலுகைகள், ஜனவரி 1, 2016 முதல் கிடைக்க வாய்ப்புள்ளது.


இதன் மூலம், மத்திய அரசின் ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் 80 லட்சம் பேர் பயன் பெறுவர்.

No comments:

Post a Comment