"போலீஸ் தேர்வுகளில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என, அப்படைக்கான ஏ.டி. ஜி.பி., முத்துகருப்பன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:தமிழக ஊர்க்காவல் படையில் 15,672 பேர் உள்ளனர். இதில், 60 சதவீதம் பேருக்கு, மாதம் 25 நாட்கள் பணி ஒதுக்கப்படுகிறது. ஆண்டிற்கு ரூ.33 கோடி செலவிடப்படுகிறது. சென்னையில், போலீஸ் வாகன டிரைவர்களாக 500 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர். இந்தாண்டு, இப்படைக்கு பொன்விழா ஆண்டு. இதையொட்டி, வீரர்களின் ஊதியம் ரூ.65லிருந்து 130 ஆக உயர்த்தி, முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். மதுரையில் செப்., 27, 28, 29 ல் நடக்கவுள்ள விளையாட்டு போட்டிகளுக்காக, ரூ.10 லட்சமும் வழங்கியுள்ளார். போலீஸ் தேர்வில், இப்படை வீரர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment