புவியியல் குறியீடு என்பது ஓர் வறையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள் அவ்விடத்திற்கே உரித்தான சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் ஒரு பொருளுக்கு அல்லது கலைக்கு வழங்கப்படும் சிறப்புக் குறியீடு ஆகும்.
இக்குறியீட்டை பெறுவதன் மூலம் இந்த கலையை வேறு யாரும் வியாபார நோக்கத்துடன் போலியாவோ அல்லது இக்கலையின் சிறப்பு அம்சங்களை வேறு வகையிலோ உபயோகப்படுத்த முடியாது. மேலும் இக்குறியீட்டின் கீழ் தங்களைப் பதிவு செய்யும் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தக் குறியீட்டை உபயோகிக்கும் உரிமை உண்டு. இதனை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, பத்தமடை பாய், நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை உள்ளிட்ட சிறப்புக் கலைகள் புவியியல் குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment