ஒடிசா ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தை சேர்ந்த, நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, நேற்று பதவி ஏற்றார். இவருக்கு, தமிழகத்தை சேர்ந்த, தலைமை நீதிபதி, சதாசிவம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சொக்கலிங்கம் நாகப்பன், சமீபத்தில், பதவி உயர்வு பெற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சஇதையடுத்து, நேற்று, சுப்ரீம் கோர்டில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், சொக்கலிங்கம் நாகப்பன், பதவி ஏற்றார். அவருடன், அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிய, பீகாரை சேர்ந்த, நீதிபதி சிவ் கீர்த்தி சிங்கும், நீதிபதியாக பதவி ஏற்றார்.
No comments:
Post a Comment