Friday 14 March 2014

இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் தாம்பரத்தில் வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
விமானப்படை ஏர்மேன் (தொழில்நுட்பம் அல்லாதது) பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை நிலைய ஏர்மேன் தேர்வு மையத்தில் வருகிற 23-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர்,
தஞ்சாவூர், கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்தோரும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த வர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். விமானப்படையில் சேர பிளஸ்-2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். விண்ணப்பதாரர் 1.2.1994-ம் ஆண்டுக்
கும் 31.5.1997 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆள்சேர்ப்பு முகாம் தொடர் பாக ஏதேனும் விளக்கம் தேவைப் பட்டால் தாம்பரம் விமானப்படை நிலைய ஏர்மேன் தேர்வு மையத்தை 044-22390561, 22396565 (எக்ஸ்டென்சன் 7833) ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 94452-99128 என்ற செல்போன் எண்ணிலோ அலுவலக நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment