Wednesday 12 March 2014

Basis Point - என்றால் என்ன?

அடிக்கடி ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை basis point. பொதுவாக வட்டி விகிதத்தை மாற்றும்போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு basis point என்பது ஒரு சதவீதத்தின் நூறில் ஒரு பங்கு.
ஒரு சதவீதம் என்பது நூறு basis points கொண்டது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 7% லிருந்து 7.25% அதிகரிக்கிறது என்பதை, ‘வட்டி விகிதம் 25 basis points அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கும்.
Bank for International Settlements (BIS)
உலக நாடுகளில் உள்ள வங்கிகளுக்கிடையே கூட்டுறவையும், நிதி மற்றும் பணத் துறைகளில் நிலைத் தன்மையை ஏற்படுத்தவும் இந்த பன்னாட்டு அமைப்பு 1930-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:
1. மத்திய வங்கிகளுக்கிடையே கூட்டுறவையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவது.
2. நிதித் துறையில் உள்ள அதிகாரிகளுக்கிடையே விவாதங்களை ஏற்படுத்துவது.
3. வங்கி மற்றும் நிதித் துறைகளில் ஆராய்ச்சிகள் நடத்துவது.
4. மத்திய வங்கிகளுக்கிடையே பரிவர்த்தனையில் துணை நிற்பது.
5. பன்னாட்டு நிதி செயல்பாடுகளின் பாதுகாவலராக இருப்பது. இவைமட்டுமல்லாமல், நிதித் துறைகளில் உள்ள ஏமாற்று திட்டங்கள் பற்றியும் அவ்வப்போது ஆராய்ந்து கூறுகிறது. வங்கித்துறையில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம். இந்நிறுவனத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டில் Basel என்ற நகரில் உள்ளது.
Basel கட்டுபாடுகள் (Basel Norms)
1988இல், BIS சேர்ந்த நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் ஒன்றுகூடி விவாதித்து, வங்கிகள் ஒவ்வொன்றும் குறைந்தபட்ச முதலீட்டு தொகை எவ்வளவு வைத்திருக்கவேண்டும் என்ற பரிந்துரையை செய்தன. இதற்கு 1988 பசேல் ஒப்பந்தம் என்று பெயர். இதனை Basel I என்றும் அழைத்தனர்.
இதன் பிறகு2004 யில் Basel II என்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது. வங்கிகள் எல்லாம் Basel II சட்டங்களை செயல்படுத்தியதால் 2008 யில் உலக நிதி சிக்கல் ஏற்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டினர். உலக நிதி சிக்கலுக்கு பிறகு வங்கிகள் நொடிந்துபோகாமல் இருக்க Basel III என்ற சட்டத்திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தபட உள்ளது.
அடிப்படையில் வங்கிகள் கடன் கொடுப்பதால், அவை credit ரிஸ்க் எடுக்கின்றன. அதாவது கடன் வாங்கியவர் திரும்ப பணத்தை செலுத்தாமல் போகும் ரிஸ்க். இந்த credit ரிஸ்க் அதிகமானால் வங்கியில் பணம் வைத்தவர்களின் நம்பிக்கையை வங்கிகள் இழக்கும்.
இதனை சரிசெய்யும் பொருட்டு வங்கிகள் தாங்கள் எடுக்கும் credit ரிஸ்க்கு ஏற்ப முதலீட்டை சேகரிக்கவேண்டும் என்ற கட்டுபாட்டை விதிப்பது basel சட்டங்களின் அடிப்படை கருத்து. ஒவ்வொரு முறை அதிக ரிஸ்க் உள்ள கடனைக் கொடுக்கும் போதும், வங்கிகள் அதிக முதலீட்டு பணத்தை சேர்க்கவேண்டும் என்பதாலேயே, ரிஸ்க் எடுப்பதை கட்டுப்படுத்த முடியும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment