கடவுள் துகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்ட, பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகளுக்கு, இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொதுச்சேவை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், நேற்று முன்தினம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க பல்கலைக் கழக விஞ்ஞானிகள் மூவருக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரிட்டனை சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ், பெல்ஜியத்தை சேர்ந்த பிராங்காய்ஸ் எங்க்லெர்ட் ஆகியோருக்கு அளிக்கப்பட உள்ளது. கடவுள் துகள் தொடர்பான, ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றிய ஆராய்ச்சிக்காக, இவர்களுக்கு, நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. பிரபஞ்சம் உருவானதற்கான துகள் பெயர், "ஹிக்ஸ் போசன்!' பிரமாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து சிதறியதில், பூமி உட்பட நட்சத்திரங்கள், கோள்கள் வளி மண்டலத்தில் நிலை கொண்டன என, இயற்பியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். "பிக் பேங்' வெடிப்பு நடந்த வினாடியில், ஒலியை விட அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் அணுக்கள் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் இல்லை. ஆனால், "ஹிக்ஸ் போசன்' எனப்படும் சக்தியோடு, அவை தொடர்பு கொண்ட பின், அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இதுதான், 'பேரண்டம்' உருவான கதை. பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை, 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில், 11 அணுத் துகள்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக் கூறுகளுக்கும், ஏன் எடை உள்ளது என்பது குறித்து, சுவிட்சர்லாந்தில், செர்ன் என்னும் இடத்தில், அணு மோதலுக்கான பெரிய பரிசோதனைக் கூடத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஹிக்ஸ் போசன் எனப்படும் கடவுள் துகள்கள், மூலக்கூறுகளுக்கு எடை உருவாக காரணம் என்பதை, இந்த விஞ்ஞானிகள், கடந்த ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக, தற்போது இவர்களுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஹிக்ஸ் போசான்' என்பது என்ன:
பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் ப்ரான்சுவா ஆங்லாட் ஆகிய இருவருக்கும் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் 1964ம் ஆண்டு முதல் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வின் முக்கிய முன்னேற்றமாக, "கடவுளின் அணு துகள்' என அழைக்கப்படும் "ஹிக்ஸ் போசானை' கடந்த ஜூலையில் கண்டுபிடித்தனர். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்திய இயற்பியல் விஞ்ஞானியான சத்தியேந்திரநாத் போஸ் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் பெயர்களை இணைத்தும், பீட்டர் ஹிக்ஸ் பெயரையும் சேர்த்து, "ஹிக்ஸ் போசான்' என "கடவுள் துகளுக்கு' பெயர் வைக்கப்பட்டது. பூமிக்கு அடியில் 2 புரோட்டான்களை மோதச் செய்து, அதிலிருந்து பிரிந்த துகள்களில், "ஹிகஸ் போசான்' இருப்பதை, அதன் நிறையைக் கொண்டு உறுதி செய்யப்பட்டது. இந்த துகள் தான், அணுவுக்கு நிறையை தரக் கூடியது, என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் முன்பு, "பிக்பேங்' என்ற பிரளய வெடிப்பால், இந்த பேரண்டம் உருவானது, என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வெடிப்பு நிகழ்ந்த பொழுது, அணுக்களுக்கு நிறை இல்லை. இந்த அணுக்களுக்கு, "ஹிக்ஸ் போசான்' என்ற கட்டத்தை கடந்த பின் தான், நிறை கிடைக்கிறது. முதலில், "ஹிக்ஸ் போசானை' கண்டுபிடிக்கும் முயற்சியை, அமெரிக்கா துவங்கியது, பலன் கிடைக்காததால், கைவிட்டது. பின்னர், ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் சோதனையை துவங்கியது. இது ஆரம்ப கட்டம் தான். விஞ்ஞானிகள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
No comments:
Post a Comment