வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மூன்று நாட்களும், பொது அறிவுத்தாள், ஒன்று, இரண்டு, மூன்று என, மூன்று தாள்களாக நடக்கும். காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருந்தால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அல்லது தேர்வாணையத்தின் கட்டணம் இல்லாத தொலைபேசி (18004251002) மூலமாகவோ, தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார். இந்த தேர்வு, கடந்த மாதம் நடக்க இருந்தது. அதே நாளில், வேறு போட்டித் தேர்வுகள் இருந்ததால், இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதன்மை தேர்வை, 950க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment