Monday, 28 October 2013

ராணுவத்துக்கு நவ., 6ல் ஆள் தேர்வு


ராணுவத்தில் பணியாற்ற ஆள் தேர்வு நவ., 6 முதல் 14 வரை நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க வருவோர், 10ம் வகுப்பு, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்,டி.சி., ஜாதி, இருப்பிடம் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை அசலாக கொண்டு வரவேண்டும். 

படைவீரர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், போரில் மரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட சான்றுகளோடு வரவேண்டும். விளையாட்டு, என்.சி.சி., போன்ற பிற தகுதிகள் இருந்தால் அதற்கான உரிய சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். 

தேர்வு நாள் அன்று காலை 5.30 மணிக்கு கோவை நேரு விளையாட்டு அரங்குக்கு நேரில் வரவேண்டும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment