தொழில்துறை செயலர், பழனியப்பன், ஊரகவளர்ச்சித்துறை செயலர் சங்கர் உள்ளிட்ட, ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டஅறிவிப்பு:
பெயர் - பழைய பதவி - புதிய பதவி
1. கோபாலகிருஷ்ணன் - இயக்குனர், மக்கள் தொகை கணக்கெடுப்பு - கமிஷனர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
2. ஸ்வரண்சிங் - கமிஷனர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை - கமிஷனர், தொழிற்சாலைகள், இயக்குனர், தொழிற்சாலைகள் மற்றும் வணிகம்
3. பழனியப்பன் - முதன்மை செயலர், தொழில்துறை - முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை
4. சங்கர் - முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை - முதன்மை செயலர், தொழில் துறை
5. பாலச்சந்திரன் - தலைவர், மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் லிட் - தலைமை செயல் அதிகாரி, தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் கழகம்
6. வெங்கடேஷ் - இணை கமிஷனர் (கல்வி), சென்னை மாநகராட்சி - மேலாண் இயக்குனர்,தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் லிட்.
மேலும், தற்போது திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலராக உள்ள, கிருஷ்ணனுக்கு, 14 வது, நிதி கமிஷனின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகார்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனராக இருந்த ஸ்வரண் சிங்கிற்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் கமிஷனர் மற்றும் தொழிற்சாலைகள், வணிகத்துறை இயக்குனர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தொழிற்சாலைகள் கமிஷனர் பதவியை தனவேல் கூடுதலாக கவனித்து வந்தார்.
No comments:
Post a Comment