Friday, 11 October 2013

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 18 லட்சம் அரசு ஊழியர் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.3,800 வரை கூடுதலாக கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.2,293 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன் வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment