Wednesday, 23 October 2013

ரூபாய் தாள்களின் அம்சங்கள்

1950இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக (Watermark) கொண்டிருந்தன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், வளர்ச்சி, இந்திய கலை வடிவங்கள் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” (Satyameva Jayate) என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்படும். இன்றும் இந்த ரூபாய் தாள்கள் சில புழக்கத்தில் உள்ளன.

1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி (Watermark) இருக்கும்.

தற்போதுள்ள ரூபாய் தாள்களின் பாதுகாப்பு குறிப்புகள் பின்வருமாறு:

1. ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் ஜன்னல் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.

2. நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.

3. காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, கவர்னர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.

4. முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.

No comments:

Post a Comment