Monday, 28 October 2013

நெட் தேர்வு விண்ணப்பிக்க அக்., 30 வரை வாய்ப்பு

பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படும் "நெட்' தேர்வுக்கு அக்., 30க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும், தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தும். மேலும், ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். அக்., 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இணையதளத்தில், பதிவிறக்கம் செய்த வங்கி சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தேர்வு கட்டணத்தை நவ., 2 வரை செலுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக்கூட அனுமதி சீட்டு, வருகை ரசீது ஆகியவற்றை நவ., 5 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதுசார்ந்த விபரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment