அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் வேறுபாடு உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் அரசுத் துறைகள் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொரப்பட்டது.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து அரசு துறைகள், அரசுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதுடன் அதை சரியாக அமல்படுசுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மேலும் ஒரு புதிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. அதன்படி வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ஆதார சீட்டை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆ+ணையத்துக்கு உத்கரவிட்டுள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment