Saturday, 19 October 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் 22ல் சான்றிதழ் சரிபார்ப்பு


மாநில அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் 2,881 இடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஜூலை 21ம் தேதி நடந்தது. 

இத்தேர்வில், தமிழ் பாடத்துக்கான கேள்வித்தாளில் எழுத்துப்பிழைகள் இருந்த காரணத்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ் பாடத்திற்கான தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டது.

தமிழ் அல்லாத பிற பாடங்களுக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. 

சான்றிதழ் சரிபார்ப்புக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் பணி கோவை உட்பட 14 மாவட்டங்களில், 22 மற்றும் 23ம் தேதி நடக்க உள்ளது.

No comments:

Post a Comment