Friday, 11 October 2013

கோவையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு


கோவையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு... எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 படித்தவர்கள் கலந்துகொள்ளலாம்

கோவையில் அடுத்த மாதம் 6–ந்தேதி தொடங்கும் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 படித்தவர்கள் கலந்துகொள்ளலாம் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு

கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் வருகிற 6.11.2013 முதல் 14.11.2013 வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

இந்த ஆட்சேர்ப்பில் சோல்ஜர், ஜிடி பதவிகளுக்கு 6.11.1992 முதல் 6.05.1996–க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். சோல்ஜர் டெக்னிக்கல். சோல்ஜர் டெக்னிக்கல் ஏவியேசன், சோல்ஜர் டெக்னிக்கல் டிரஸ்ஸர், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட் மற்றும் சோல்ஜர் கிளார்க் ஸ்டோர்கீப்பர் ஆகிய பதவிகளுக்கு 6.11.1990 முதல் 6.5.1996–க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு விவரம்

1.சோல்ஜர் ஜெனரல் தேர்வு:–6.11.2013கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தேனி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி7.11.2013திண்டுக்கல், மதுரை, தருமபுரி, நாமக்கல் மற்றும் திருப்பூர்

2.சோல்ஜர்டெக்னிக்கல், சோல்ஜர்டெக்னிக்கல் ஏவியேசன்,சோல்ஜர் டெக்னிக்கல்டிரஸ்ஸர், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட். 8.11.2013கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தேனி, கிருஷ்ணகிரி,9.11.2013 திண்டுக்கல், மதுரை, தருமபுரி, நாமக்கல் மற்றும் திருப்பூர்

3.சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர்–10.11.2013கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர். என்சிசி சான்று உள்ளவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அந்தந்த தரத்திற்கேற்ற வகையில் அனைத்து நாட்களிலும் கலந்து கொள்ளலாம்.

கல்வி சான்றிதழ்கள்

1.பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்) மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றிடப்பட்ட எட்டு நகல்கள்.

2.அசல் பள்ளி மாற்று சான்று அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட சான்று மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றிடப்பட்ட எட்டு நகல்கள்.

3.அசல் சாதிச் சான்று மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றிடப்பட்ட எட்டு நகல்கள்.

4.கடந்த ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்ட நடத்தைச் சான்று. இச்சான்றினை கிராம நிர்வாக அலுவலர், தற்போது பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்றிக்க வேண்டும்.

5.15 மார்பளவு மற்றும் 10 ஸ்டாம்ப் அளவு புகைப்படம். புகைப்படத்தில் பெயர் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

6.முன்னாள் படைவீரர்,தற்போது படைப்பணியாற்றுவோரின் வாரிசுகள் சம்மந்தப்பட்ட படை ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்ற உறவு முறை சான்று

7.என்சிசி விளையாட்டு வீரர்களுக்கான சான்றுகள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment