நடப்பு 2013-14ம் நிதியாண்டில், வங்கி துறையில், 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் வேலைவாய்ப்பு உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய வங்கி துறையில் உள்ள பல வங்கிகள், நடப்பு நிதியாண்டில், மிக அதிகளவில், கிளைகளை துவக்கி வருகின்றன.
வங்கி உரிமம்:இந்நிலையில், பணி ஓய்வு பொறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவது மற்றும் நடப்பு நிதியாண்டின் இறுதியில், புதிய வங்கிகள் துவங்க, ரிசர்வ் வங்கி, உரிமம் அளிக்க உள்ளது. இது போன்ற காரணங்களால், வங்கி துறையில், புதிதாக, வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக, பல்வேறு வங்கிகள் தெரிவித்து உள்ளன.
இதையடுத்து, நடப்பாண்டில் வங்கிகளில், புதிதாக, ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இது, கடந்தாண்டில் பணிக்கு சேர்த்து கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, 25-30 சதவீதம் அதிகமாக இருக்கும் என, டேலண்ட் ஸ்பிரின்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சந்தனு பால் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள், நாடு தழுவிய அளவில், கூடுதலாக, 8,000 புதிய கிளைகளை துவக்க உள்ளன.இது தவிர, தனியார் மற்றும் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளும், அவற்றின் கிளைகளி?ன் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளன.
இதனால், வங்கி துறையில், பணியாளர்களின் எண்ணிக்கை, சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்கின் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர் கூறியதாவது:வங்கி, விரிவாக்க நடவடிக்கையாக, கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. மேலும், பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக, புதிதாக பணிக்கு ஆட்களை சேர்க்க வேண்டியுள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நிகர அளவில், 5,000-6,000 நபர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ. பேங்க்கும் இவ்வாண்டு, நாடு தழுவிய அளவில், கூடுதலாக, 300 கிளைகளை துவங்க உள்ளது. தற்போது, இவ்வங்கிக்கு, 1,082 கிளைகள் உள்ளன. இவை தவிர, துபாயிலும், ஒரு வங்கி கிளை உள்ளது.நடப்பாண்டில், வங்கி, 2,000-2,200 பேரை பணிக்கு தேர்வு செய்ய இருப்பதாக, இவ்வங்கியின் துணை நிர்வாக இயக்குனர், எம்.ஓ.ரிகோ தெரிவித்தார்.
கிராமங்கள்:இதுகுறித்து பேங்க் ஆப் மகராஷ்டிராவின் செயல் இயக்குனர் சி.வி.ஆர்.ராஜேந்திரன் கூறியதாவது:வங்கி, நடப்பாண்டில், புதிதாக, 2,000 பேரை பணிக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளது. நாடு தழுவிய அளவில், கிராமப்புறங்கள் மற்றும் பல்வேறு இடங்களில், கலாசாரங்களுக்கு ஏற்ப, மொழிகளை எளிதாக புர்ந்து கொள்ளும் வகையில், பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம்.நடப்பாண்டில், 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, கடந்தாண்டை விட, 30 சதவீதத்திற்கும் அதிகமாக, பணியாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளோம்.இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment