குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு செப். 5 முதல் விண்ணப்பிக்கலாம்.
வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வாணைய இணையதளத்திலேயே www.tnpsc.gov.in விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.,4ம் தேதி கடைசி நாளாகும். குரூப் 2 முதல் நிலைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.
குரூப் 2 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment