Monday 26 May 2014

இன்ஜினீயர்களுக்கு வேலை

இன்ஜினீயர்களுக்கு வேலை

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினீயர்ஸ் லிமிடெட். இதில் உதவி மேலாளர்கள் பணிக்கான 45 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. இன்ஜினீயரிங் (4 ஆண்டுகள்), ஏஎம்ஐஇ, சிஏ, எம்பிஏ. இறுதி செமஸ்டர் தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது:
2014 மே 1 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படியான வயதுச் சலுகை உண்டு.
பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் ஏனையோர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொல்கத்தாவில் நடைபெறும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://jobapply.in/GRSE2014Adv2/DefaultAdv2.aspx என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அப்ளிகேஷனை பிரிண்ட் எடுத்து அதை Post Box No. 4334, Kalkaji Head Post Office, New Delhi 110019 என்னும் முகவரிக்கு சாதாரணத் தபாலில் ஜூன் 12க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 5. கூடுதல் விவரங்களுக்கு http://www.grse.nic.in/

No comments:

Post a Comment