Saturday, 5 October 2013

குரூப் 2 தேர்வு; 6.85 லட்சம் விண்ணப்பம்: நவநீத கிருஷ்ணன் தகவல்!


குரூப் 2 தேர்வுக்கு இது வரை 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''வணிகவரித் துறை துணை அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, சார்பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 பிரிவில் உள்ள ஆயிரத்து 64 பணி இடங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 2 தேர்வுக்கு இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளனர். இந்த தேர்வு 115 நகரங்களில் நடைபெறும்.

அதே போல், கடந்த மார்ச் மாதம் 220 பொறியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது" என தெரிவித்தார்.

No comments:

Post a Comment