Monday, 29 April 2013

"குரூப் 4' மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்


"வி..., பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், நேரடி தேர்வை ரத்து செய்து, இளநிலை உதவியாளர் பணி நிலையில், "குரூப் 4' மூலம் தேர்வு செய்ய வேண்டும்' என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.


கிராம நிர்வாக இடர்பாடுகள், வருவாய் நிர்வாக சீரமைப்பு உட்பட தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். வி...,க்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வருவாய் பணியாளர் அங்கீகாரம், பதவி உயர்வு வேண்டும்; உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் போல, இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஒருங்கிணைக்கப்பட்டதாக மாற்ற வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேலும், "வருவாய்த் துறையில் நேரடி நியமனங்களை குறைத்து, இளநிலை உதவியாளர் பணி நியமனங்களை அதிகரிக்க வேண்டும்; பட்டா, சிட்டா, ஜாதி, வருவாய்ச் சான்றிதழ்களை, பிர்க்கா அளவில் வழங்க, துணை தாசில்தார் அலுவலகங்கள் உருவாக்க வேண்டும்; 25 ஆண்டு பணிசெய்த வி..., மற்றும் கிராம உதவியாளர்களுக்கு, ஊக்க சம்பளம் வழங்க வேண்டும்' என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தாய் திட்டம்





தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) அமலில் உள்ளது. இத்திட்டம், .தி.மு.., ஆட்சிக்கு வந்த பின், 2011-12ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள, 79 ஆயிரத்து 394 சிறு கிராமங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி, அனைத்து பருவ நிலைக்கும் ஏற்றாற்போல் சாலைகள், தெருவிளக்கு, சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர், காங்கிரீட் சாலை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள், தாய் திட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன.இவை தவிர, அங்கன்வாடி மையம், பொதுவினியோகக் கூடம், சுயஉதவிக் குழுக் கட்டடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Sunday, 28 April 2013

Freedom that must have limits

Pornography degrades, subjugates and reinforces negative stereotypes about women which is why access to it must be made tougher

Kamlesh Vaswani’s PIL seeking to ban the viewing of pornography and make it a non-bailable offence has raised eyebrows. Columnists and social media commentators have greeted the idea with shock, raising issues such as social liberty, sexual freedom, and the fact that the mere banning of pornography might not bring down the incidence of rape. On the surface of it, this sounds politically correct but the reality is much more complex.

Take two facts. First, the two men arrested for raping the five-year-old in Delhi were watching porn before they stepped out and abducted the girl. Second, Google Trends shows that in 2012, New Delhi recorded the highest percentage worldwide for the number of times the word ‘porn’ was searched online. And National Crime Records Bureau data for the same year show that 706 rapes were reported in Delhi, the highest in the last decade and more than double the number for 2002.

In the West

Too simplistic a correlation? Perhaps. But does that mean we can afford to ignore the parallel? The world over, governments and sociologists are struggling with the issue of untrammelled access to pornography and the alarming rise in incidents of violent rape and child abuse. In London, Prime Minister David Cameron is set to announce a government-backed code of conduct that will block pornography in public spaces such as cafes and railway stations where children are likely to be present.

Liberal Iceland’s existing laws banning pornography are similar to India’s — vague and rarely enforced. The government there is drafting a law, much to the horror of some of its wired and freethinking citizens, that seeks to ban pornography altogether to protect children from violent sexual imagery. AGuardian report quotes an Icelandic Interior Ministry spokesperson: “When a 12-year-old types ‘porn’ into Google, he or she is not going to find photos of naked women out on a country field, but very hardcore and brutal violence.”
The problem with pornography is just that. It is not so much about erotica, as its advocates will have us believe, as it is about extreme violence, degradation and subjugation of women, and the violation of children and teenagers. It extols rape, defilement and mutilation. Most dangerously, it mainstreams all of this and packages it as the “normal.” This is lethal in a place like India, where large numbers of people leapfrog from a state of total ignorance about even ordinary sex to direct exposure to vicious abuse.

Documenting abuse

As the pornography industry thrives by getting more extreme each day, sociologists have correspondingly begun to note that gang rapes have risen, the age of the rapists has fallen, and the violence is much more brutal today. One report quotes U.S. Department of Justice statistics that show the percentage of rapes involving two or more offenders increasing from seven per cent in 1994-1998 to 10 per cent in 2005-2010.

In last year’s Steubenville High School rape in Ohio, U.S., when a high schoolgirl was doped and repeatedly violated by her schoolmates, two other appalling facts emerged. One, the rapists uploaded photos of the acts on social media where it went viral; and second, students who witnessed the acts said they did not recognise the acts as rape. In the last few months, two teenagers, Rehtaeh Parsons and Audrey Potts, in the U.S. and Canada, respectively, have committed suicide after being gang-raped by 16- and 17-year-old boys who then posted the photos online. Let us not forget our own MMS scandals involving schoolchildren.

Blurring lines

This trend of online documentation of abuse follows closely on the footsteps of porn websites that actively encourage the posting of real-life pictures of girls caught unawares or of pictures taken of them with hidden cameras. In other words, the lines are already blurring between pornographic websites and social network websites. What was once an explicit image on a clandestine website could today be a picture of a classmate on Facebook.
It might be statistically impossible to directly link the viewing of pornography to rape, but it is undeniable that its mainstreaming is actively encouraging and endorsing a culture of abuse of women and children. Recent news reports, in fact, have quoted counsellors who say that obsessive porn viewing is today a leading cause of marital abuse and divorce in India.
The link between violence in films and the increased rate of violence in society is equally unverifiable, but it’s interesting that this medium has always been filtered by some form of certification. How then is a medium that is inherently much more dangerous left so unregulated?

The existing IT Act, which stipulates three years’ imprisonment for publishing and transmitting obscene material electronically, is followed more in the breach. Following the PIL, the Supreme Court has asked the Ministries of Information Technology, Information and Broadcasting, and Home Affairs to come up with some answers by April 29. Whether it is stricter policing and stiffer (and implemented) punishments, or some sort of technologically feasible filters, or steep levies on the viewing of such content, some adequate response is required, something that makes it more difficult to access porn than ticking a box that asks if you are 18.

Yes, freedoms are precious and worth fighting for, but just because some of our men are not mature enough to enjoy these freedoms responsibly, should our children and women be made to pay the price?

Saturday, 27 April 2013

நீலகிரியில் புதிய நீர் மின் திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடுக்கு பயன்


நீலகிரியில், "புதிய நீர் மின் நிலையம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது; அதே நேரம், "பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்ட பல நீர்மின் திட்டங்கள் கிடப்பில் உள்ள நிலையில், புதிய திட்டம் எந்தளவுக்கு சாத்தியமாகும்' என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, சிங்காரா, மாயார் உட்பட பல இடங்களில் உள்ள 12 நீர் மின் நிலையங்கள் மூலம், மாதம் 833.62 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மாவட்ட மக்களின் தேவைப்போக, ஈரோடு மின்பகிர்மான வட்டத்தை மையாக வைத்து, மாநிலம் முழுவதும், மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின் வெட்டு இருந்து வருகிறது. மாறாக, நீலகிரியில் மின் வெட்டு என்பது இல்லை. பராமரிப்பு பணிகளின் போது மட்டும் மின்தடை ஏற்படுகிறது.


புதிய மின் திட்டம்: இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சில்லஹல்லா நீர் தேக்கத்தை மையமாக வைத்து, புதிய நீர் மின் நிலையம் அமைக்கப்படும், என மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, மஞ்சூர் அருகே, எடக்காடு - தங்காடு இடைப்பட்ட சில்லஹல்லா நீர் தேக்கத்தை மையமாக வைத்து, 7,000 கோடி ரூபாய் மதிப்பில், 2,000 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்கும் வகையில் நீர் மின் நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வந்தால், நீலகிரியின் மிக அதிகளவு மின் உற்பத்தி செய்யப்படும் நீர் மின் நிலையமாக இது இருக்கும்; தவிர, மாநிலத்தின் மின் தேவையில் பெருமளவு பூர்த்தியாகும். அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுக்கு முன், நீலகிரி மாவட்டத்தில் குந்தா, குன்னூர், கூடலூர் உட்பட 13 இடங்களில், 1,650 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய நீர் மின் நிலையங்களை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தயாரிக்கப்பட்டது. கடந்த 2007ல், குந்தா காட்டுக்குப்பை பகுதியில், 1,500 கோடி ரூபாய் செலவில், 1,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய அளவில், மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது; இத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மாநில முதல்வர் அறிவித்துள்ள புதிய திட்டம், எந்தளவுக்கு சாத்தியமாகப் போகிறது, என்ற கேள்வி மின் வாரிய வட்டாரங்களில் எழுந்துள்ளது.


கோவை, திருப்பூருக்கு அதிக பயன்: சில்லஹல்லா நீர் மின் நிலையம் நடைமுறைக்கு வந்தால், நீலகிரி தவிர, கோவை, ஈரோடு மாவட்டங்களின் மின் தேவையில் பெருமளவு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ""முதல்வரின் அறிவிப்புப் படி, இத்திட்டம் முடிய 8 - 10 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எந்தளவு, மின் வினியோகம் செய்யப்படும், எனக் கூற முடியாது. அந்தந்த காலத்திற்கேற்ப, மின் வினியோகம் இருக்கும். எனினும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு இத்திட்டத்தால் பெரும் பயன் கிடைக்கும். 

Friday, 26 April 2013

கேள்வி பதில்

கேள்விகள்:

1. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?

2 தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது?

3. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேற்றூவிக்கப்பட்ட ஆண்டு எது?

4. தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான தேர்தல் முறை எதில் கிடைக்ககிறது?’

5. 1935- ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகானத்தில் அமைச்சரவையில் அமந்த கட்சி?

6. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை?

7. தமிழ்நாட்டின் நகரங்களின் எண்ணிக்கை எத்தனை?

8. தமிழக அரசுச் சின்னமாக விளங்குவது எது?

9. முல்லை நிலம் என்பது?

10. தமிழ்நாடு அரசு அமைத்த மத்திய-மாநில அரசு உறவுகளைப்பற்றிய குழுவிற்கு தலைமை வகித்தவர் யார்?


11. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் எது?

12. திருவிடையாட்டம் என்றால் என்ன?

13. தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டம் எது?

14. பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை தாங்கியது

15. எந்த வருடம் சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது?

16. மிக அதிக கொள்திறன் கொண்ட அனுமின் நிலையம் எது?

17 தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

18. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?

19. தமிழின் முதல் நிகண்டு?

20. தமிழ்நாட்டில் ஜமிந்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது?


21. பெரும்பாலான மாவட்டங்களில் தமிழ்நாட்டில் குடும்பத் தொழிலாக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பது?

22. கனியன் பூங்குன்றனார் விருது எதனோடு தொடர்புடையது?

23. தமிழ்நாட்டில் NH 47 நெடுஞ்சாலை எது?

24. தென்னிந்திய புரட்சியின் போது திண்டுக்கல் கூட்டினைவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?

25. போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு பாண்டிய அரசர்கள் வழங்கிய நிலங்களின் பெயர்?

26. விழாக்களின் நகரம்?

27. பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தவர் யார்?

28. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?

29. மெய்கீர்த்திகள் எழுதும் வழக்கம் முதன் முதலில் எந்தச் சோழன் காலத்தில் தோன்றியது?

30. உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம் எது?


31. ‘பிரம்மதேயம்’ என்னும் சொல் எதனைக் குறிக்கும்?

32. சாத்தனூர் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது?

33. சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?

34. தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டவை எவை?

35. சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது?

36. சென்னைக்கு குடிநீர் கொண்டுவர பூண்டி நீர் தேக்கத்தை திட்டமிட்டவர்?

37. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் யார்?

38. தமிழ்நாட்டில் முதன் முதலில்;அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ள இடம் எது?

39. இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

40. பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர் யார்?


41. வலிமை மிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர் யார்?

42. தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு ?

43. முல்லை பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் ...............?

44. திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு எது?

45. சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மனி யார்?

46. சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணீர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம் எது?

47. நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

48. தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது?

49. எந்த மாவட்டத்தில் தோடர்கள் ( மலைவாழ் பழங்குடிகள் ) அதிகமாக வாழ்கின்றனர்?

50. எந்த குன்றில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?



விடைகள்:


  1. ஜானகி ராமச்சந்திரன்
  2. 1980
  3. 1937
  4. கல்வெட்டாக
  5. காங்கிரஸ் கட்சி
  6. 18
  7. 832
  8. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம்
  9. காட்டுப்பகுதி
  10. ராஜமன்னார்
  11. தொட்ட பெட்டா
  12. கோயில் வசம் இருக்கும் நிலம்
  13. நீலகிரி
  14. 1887-ல் சென்னையில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில்
  15. 1852
  16. தாராப்பூர், மகராஷ்டிரா.
  17. மல்லப்பாடி
  18. நல்லாதனார்
  19. திவாகர நிகண்டு
  20. 1948
  21. கைத்தறித் தொழில்
  22. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் வெளிவரும் தமிழ் மென்பொருள்
  23. சேலம் முதல் கன்னியாகுமாரி வரை.
  24. ஜூன், 1800
  25. உதிரப்பட்டி
  26. மதுரை
  27. விஜாலயன்
  28. 1.3 லட்சம் சதுர கி.மீ
  29. முதலாம் இராஜராஜன்
  30. கன்னியாகுமாரி
  31. பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்
  32. தென்பெண்ணை
  33. காவேரி
  34. கிணறு
  35. 1921
  36. சத்தியமூர்த்தி ஐயர்
  37. இரண்டாம் நரசிம்மவர்மன்
  38. சென்னை
  39. தமிழ்நாடு
  40. சுந்தர பாண்டியன்
  41. முதலாம் ராஜேந்திரன்
  42. 99%
  43. கேரளா
  44. 1932
  45. ஜான்சி படையினரின் தலைவர்
  46. கிருஷ்ணா நதிநீர்
  47. 1997
  48. சென்னை
  49. உதகமண்டல்
  50. சேர்வராயன்

Thursday, 25 April 2013

மத்திய அரசு பதவிகளுக்கான புதிய தேர்வு முறையை கைவிட வேண்டும் : ஜெ., கடிதம்


"மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு பணிக்குச் செல்லும் போது, தேர்வு நடைமுறைகளை கொண்டு வருவது, மாநில அரசின், இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது,'' என, முதல்வர், ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: மாநில அரசு ஊழியர்களை, மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்வதில், மாற்றம் கொண்டு வர, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தேர்வு முறைக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய, இன்று (ஏப். 26) நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில அரசுகளுக்கு, யு.பி.எஸ்.சி., தகவல் அனுப்பியுள்ளது.மாநில அரசு ஊழியர்களை, மத்திய அரசுக்கு பணிக்கு தேர்வு செய்வதில், மாற்றங்கள் கொண்டு வருவது பற்றி, மாநில அரசுகளுக்கு, எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கொள்கை முடிவு எடுத்தது, மத்திய அரசின் தன்னிச்சையான முடிவாகும்.

மத்திய அரசின் இந்த முடிவு, இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, எடுக்கப்பட்டதாக அறிகிறோம். இந்திய நிர்வாகப் பணிகள் தேர்வு விதி, அலுவலர்களை தேர்வு செய்ய அனுமதி அளிக்கிறது. இதில், ஒரு முறை, போட்டித் தேர்வு மூலம், நேரடியாகத் தேர்வு செய்வது; மற்றொரு முறை, மாநில நிர்வாகத் துறை, போலீஸ் மற்றும் வனத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணி உயர்வு மூலம், மத்திய அரசு பணிக்குச் செல்வது. இம்முறைகள், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.மாநில பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், மத்திய பணிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதால், சிறப்பான பணித் திறனை வெளிப்படுத்துகின்றனர். மேலும், மாநில அரசுப் பணிக்கு தேர்வு செய்யும்போதே, கடுமையான போட்டித் தேர்வுகளை எழுதி தேர்வாகின்றனர். மாநில அரசு பின்பற்றும், இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையிலும், தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், மாநில அரசு அதிகாரிகளை, மத்திய பணிக்கு தேர்வு செய்ய, போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்பதை, தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. போட்டித் தேர்வு என்பது, மாநில அரசு அதிகாரிகளின் பணித் திறனை பின்னுக்குத் தள்ளுவதாகும். போட்டித் தேர்வு தான், மத்திய அரசு பணிக்கு செல்லும் வழி என்றால், போட்டித் தேர்வில் வெற்றிபெறவே, அவர்கள் தயார் செய்து கொண்டிருப்பர். பணித் திறனை வெளிப்படுத்த மாட்டார்கள்.
மாநில அரசு அதிகாரிகளின், பணித் திறனை பருவ முறையில் கண்காணித்து, அவர்களின் பணித் திறனுக்கு ஏற்பவே, பணி உயர்வு அளிக்கப்படுகிறது. புதிய போட்டித் தேர்வு முறை, பணித் திறன் அடிப்படையிலான பணி உயர்வுக்கு எதிரானது.

இதற்கிடையே, மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யும் வயது வரம்பை, 54லிருந்து, 40 ஆக குறைத்திருப்பது, மாநில அரசு அதிகாரிகளின் எதிர்காலத்தை, சீர்குலைப்பதாகும். புதிய முறை, மத்திய அரசு பணிக்கு, மாநில அரசு அளிக்கும் பங்களிப்பை மறுக்கும் செயலாகும். பின்கட்டு வழியாக, மத்திய அரசு பதவிக்கு வர, உதவுவதாகவும் அமைந்துவிடும்.எனவே, முழுமையில்லாத நிர்வாக சீர்திருத்தத்தை, மறுபரிசீலனை செய்து, மத்திய அரசு பணிக்கு, ஏற்கனவே இருக்கும் தேர்வு முறையை அனுமதிக்க வேண்டும். புதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என, யு.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்.