Tuesday, 23 April 2013

தமிழகம், புதுச்சேரியில் ரூ.37,271 கோடி வருமான வரி வசூல்


கடந்த, 2012-13ம் நிதியாண்டில், தமிழக மண்டலத்தில், வருமான வரியாக, 37,271 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது, சர்வதேச பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தமிழகத்தில், வருமான வரி வசூல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. தமிழக மண்டலத்தின் கீழ், தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் இடம் பெறுகின்றன. இம்மண்டலத்தில், 2012-13ம் நிதியாண்டில், வருமான வரி வசூல் வாயிலாக, 40,528 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில், வருமான வரி வசூல், 8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37,271 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, பட்ஜெட்டில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 92 சதவீதம். கடந்த நிதியாண்டில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, திரும்ப அளிக்கப்பட்ட தொகை, 2011-12ம் நிதியாண்டை காட்டிலும், 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,122 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்துள்ளது

No comments:

Post a Comment