”காவல் மற்றும்
உள்நாட்டு பாதுகாப்பு பல்கலைக்கழகம், சென்னை அருகே அமைக்கப்படும்” என முதல்வர் ஜெயலலிதா
சட்டசபையில் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட
அறிவிப்பு:
தமிழக காவல் துறை
பாரம்பரியம் மிக்க அமைப்பு. மேலும், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய பல்வேறு திட்டங்கள்,
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காவல் பணிகளில், கருத்தாற்றலிலும், செயல் திறமையிலும்
முதன்மை மாநிலமாக, தமிழகம் விளங்குகிறது.
தமிழக காவல் துறை
பற்றிய உயர் கல்வியை, சீராக வடிவமைத்து வழங்க சென்னைக்கு அருகில் காவல் மற்றும் உள்நாட்டு
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட, உயர் மட்ட கல்விக்கான ஒரு பல்கலைக்கழகம், இந்த நிதியாண்டில்
தோற்றுவிக்கப்படும்.
போலீசாருக்கு பயிற்சியளிக்க,
காவல் பயிற்சிப் பள்ளிகள், காவல் அகடமி ஆகியவை, செயல்பட்டு வருகின்றன. இது தவிர, குற்றங்கள்
பற்றியும், குற்றப் புலனாய்வு பற்றியும் படிக்க விரும்புவோருக்கு சென்னை பல்கலைக் கழகம்
உள்ளிட்ட சில பல்கலை கழகங்களில் ‘கிரிமினாலஜி’ எனும் படிப்பு உள்ளது.
இது தவிர ‘போலீஸ்
நிர்வாகம்’ குறித்த பட்ட மேற்படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment