மகாத்மா காந்தி, தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் (எம்.என்.ஆர். இ.ஜி.ஏ.), அனுமதிக்கப்பட்ட பணிகள் தவிர்த்து, பிற பணிகள் மேற்கொண்ட விதத்தில், 2,250 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு, ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வகை செய்யும், "மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை' 2006ம் ஆண்டு முதல், மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை மேற்கொள்கிறது.இதில், மேற்கொள்ளப்பட்ட வேலைகளை ஆய்வு செய்த, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.,), மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:திட்டம் துவங்கிய, முதலாம் ஆண்டு முதல், ஐந்தாண்டுகள் வரை, 4,000 கோடி ரூபாய் அளவிற்கு, பணிகள் முழுமையடையாமல் இருந்தன. 2009 - 10ம் ஆண்டில், 283 கோடி மனித நாட்களாக இருந்த பணிகள், 2011 - 12ல், 216 கோடி மனித நாட்களாக குறைந்தன.திட்டத்திற்கான நிதிகளை அனுமதித்ததிலும், போதுமான ஒப்புதல்கள் பெறப்படவில்லை. நிபந்தனைகளே இல்லாமல், நிதி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, 2011ம் ஆண்டு, மார்ச் மாதம், 1,960 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அனுமதிக்கப்படாதவை :
நாடு முழுவதும், 28 மாநிலங்களில், ஒரு லட்சம் பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதில், அனுமதிக்கப்படாத வேலைகளாக கண்டறியப்பட்டவற்றிற்கு,
2,250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.அனுமதிக்கப்படாத பணிகளாக, சாதாரண சாலைகள் போடுவது, சிமென்ட் கான்கிரீட் சாலைகள் போடுவது, நடைபாதைகளை மேலாக்குவது, கால்நடைகளுக்கான நடைபாதையை உயர்த்துவது, குளியல் அறைகள் கட்டியது போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.மேற்கொண்ட பணிகளில், பீகார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்,
2011 - 12ல், சரிவு கண்டுள்ளது.இவ்வாறு, சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேரிடர் மேலாண்மை:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு, பாராட்டத்தக்க வகையில் இல்லை; பல குளறுபடிகளுடன் உள்ளது. அந்த அமைப்பின் கிளைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டப்பட்ட அளவிற்கு, அவற்றின் செயல்பாடு அமையவில்லை. ஒருங்கிணைப்பு காணப்படவில்லை. கடந்த,
2008, மே மாதத்திற்கு பிறகு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தேசிய செயற்குழு கூடவே இல்லை. அதற்குப் பிறகு எவ்வளவோ பேரிடம் சம்பவங்கள் நடந்த பிறகும், செயற்குழு கூடவே இல்லை.
No comments:
Post a Comment