Monday, 29 April 2013

"குரூப் 4' மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்


"வி..., பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், நேரடி தேர்வை ரத்து செய்து, இளநிலை உதவியாளர் பணி நிலையில், "குரூப் 4' மூலம் தேர்வு செய்ய வேண்டும்' என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.


கிராம நிர்வாக இடர்பாடுகள், வருவாய் நிர்வாக சீரமைப்பு உட்பட தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். வி...,க்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வருவாய் பணியாளர் அங்கீகாரம், பதவி உயர்வு வேண்டும்; உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் போல, இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஒருங்கிணைக்கப்பட்டதாக மாற்ற வேண்டும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேலும், "வருவாய்த் துறையில் நேரடி நியமனங்களை குறைத்து, இளநிலை உதவியாளர் பணி நியமனங்களை அதிகரிக்க வேண்டும்; பட்டா, சிட்டா, ஜாதி, வருவாய்ச் சான்றிதழ்களை, பிர்க்கா அளவில் வழங்க, துணை தாசில்தார் அலுவலகங்கள் உருவாக்க வேண்டும்; 25 ஆண்டு பணிசெய்த வி..., மற்றும் கிராம உதவியாளர்களுக்கு, ஊக்க சம்பளம் வழங்க வேண்டும்' என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

No comments:

Post a Comment